கனாக் கண்டேன் 5
கனாக் கண்டேன் 5 பூலோகத்திற்குள் உள்ள தனி உலகம். காலத்தால் என்றும் அழியாத நினைவுகளின் கருவூலம் கல்லூரி . இந்தக் கல்லூரி வாழ்க்கை தான் கட்டற்ற வானில் கவலை இல்லாமல் சிறகடித்துப் பறப்பதற்கு பலருக்கு சிறகுகளைத் தருகிறது. அந்தச் சிறகுகளைக் கொண்டு அவர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாழ்க்கையின் திருப்பு முனையாவும் உள்ளது. ராகுலுக்கும் அப்படித்தான் அவனுடைய இந்தக் கல்லூரி வாழ்க்கையை பல கனவுகளுடன் காதலையும் கொண்டுள்ள அவன் எவ்வாறு கடக்க போகிறான்??!... பார்ப்போம் ✍✍✍ வாகன நெரிசல் நிறைந்த நகரத்தில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன் முக்கிய சாலையில் இருந்து கல்லூரி பேருந்து 🚌 சிறிய சாலை வழியாக செல்கிறது. சாலையின் இருபுறமும் வயல்வெளி ஆங்காங்கு மரங்கள் என அழகிய சோலை வழியாக செல்லும் சாலையின் வழியாக பேருந்து செல்கிறது 🚌. கல்லூரியின் பின்ப...