ஒடிந்தது மரக்கிளை
ஒடிந்தது மரக்கிளை என் பாட்டனால் செய்யப்பட்டது என் தாத்தனால் செய்யப்பட்டது என் தந்தையால் செய்யப்பட்டது என என்னுடைய வம்சத் தொழிலை என் வாரிசுக்குத் தர மனமில்லை அவனாவது மானத்துடன் இச்சமூகத்தில் பிழைக்கட்டும் ஆற்று நீராலும் மழை நீராலும் செய்யப்பட வேண்டிய தொழில் ஆனால் இப்போது எங்களிடம் கண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது நிவாரணத்தை வேண்டினோம் சர்காரிடம் சர்க்காரோ எங்களிடம் வேண்டியது " நிர்வாணத்தை! " உலகின் உயிரைக் காக்கும் தொழில் ஆனால் உலகுக்கு எங்கள் உயிர் துச்சமானது இறைவனால் படைக்கப்பட்ட தொழில் எனவே முறையிட இறைவனிடம் புறப்பட்டான் தொழிலாளி சுருக்கிட்ட தன் கழுத்தை மரக்கிளையில் பிணைத்தான் உலகின் நல்ல ஜீவன்கள் உன்னைக் காப்பார்கள் என "ஒடிந்தது மரக்கிளை!"