கனாக் கண்டேன் 4 கவிஞன் வடித்த காரிகையின் இடை என மெலிந்த வெண்ணிலா வில்லென வளைந்த வானத்தின் முனையில் மறைந்தும் மறையாமலும் தன் காதலனை கடைக்கண் கொண்டு பார்க்கும் காதலி போல் மதுரம் அருந்தி அதரம் சிவந்த நிறத்தில் தன் செவ்வொளியை வீசிக்கொண்டு எழும் சூரியனைப் பார்த்து மையல் கொண்டிருந்தது. அவ்வழகான அதிகாலை வேளையில் இரவு உறக்கத்தை தொலைத்துவிட்டு கண்விழித்து கனாக்கள் கண்ட ராகுல் தன் பல வருட கனவு தன் கண் எதிரில் உயிர்த்தெழுந்த சிற்பம் போல் அவள் வரப்போவதை எண்ணி அத்தருணத்திற்காக தன்னை என்றென்றும் இல்லாத அளவிற்கு சிறப்பாக தயார் படுத்திக்கொண்டான். ஒரு ஆண் தன்னை இவ்வளவு தாயார் படுத்திக்கொண்டான் என்றால்!!! பெண்ணைப் பற்றி கேட்கவா வேண்டும்???😊😄😆 இருளை திரட்டி கோர்த்து வைத்தது போன்ற கருங்கூந்தலை ...
கனாக் கண்டேன் இரவை இருள் மூடிய பிறகும் இமைகள் இன்னும் அவன் விழிகளை மூடவில்லை. ராகுல் தனது மொபைலுடன் அவனுடைய நீண்ட எதிர்பார்ப்புகளில் ஆழ்ந்திருந்தான். அப்போது அவன் எதிர்பார்த்தபடி Hi... என்று Unknown number இல் இருந்து message வந்நது. காத்திருந்த அவன் விழிகளில் பூப்பூத்தது. அவனும் பதிலுக்கு hi... என்று அனுப்பினான். அதனுடன் May I know your name??? என்று அவனுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினான். அந்தப் பக்கம் இருந்து I am your school friend!!! என பதில் வந்தது. அந்த பதிலைத் தான் அவ...
இரவில் ஒரு பயணம் கார்குழல் வானில் மின்னிடும் வெண்ணிற மல்லிகை மொட்டுக்களின் அணிவகுப்பு பௌர்ணமி கடந்து தினங்கள் ஆயினும் கார்குழல் வானிற்கு இடையில் பிரகாசிக்கும் முழுநிலவொளி வெயிலும் அல்லாமல் மழையும் அல்லாத பொழுதிலும் இரவில் இருண்டு காணக்கிடைக்கும் வானவில்கள் ஆளைப் புரட்டிப்போடும் புயல் மழைக்கு சித்தமாக,வண்ண மயில்கள் தோகை விரிக்கும் பொழுதில் கண்ணைப் பறிக்கும் யுகநேர மின்னல் வெட்டு்க்கள் சூறைக்காற்றைத் தோற்க்கடிக்க மலைக்குகைகளில் இருந்து வீசும் சூடான தென்றல் காற்று தேனெடுக்க வண்டுகள் தேடியலையும் தேன்வடியும் ஜோடி செங்காந்தள்கள் ஆழிப்பெருங்கடல்களிலும் காணப்பெறாத இரட்டை வெண்ணிற பவளப்பாறைகள் அதற்கடியில் குயிலினும் இனிய சப்தத்தை எழுப்பும் ஒற்றை வலம்புரிச்சங்கு என இரவின் இனிமையும் வளமையும் மேலும் தொடர்ந்து கொண்டிருக்க அவற்றை வர்ணிக்க வார்த்தையின்றி இனிமையை எண்ணி மனம் செல்ல "இரவின் பயணம்" தொடர்கிறது. ...