Posts

Showing posts from June, 2018

நீ வருவாய் என!!!

Image
                       நீ வருவாய் என!!! உலகிற்கு உயிரோட்டமான நீரே உன்னால் இன்னல் ஏதும் விளையலாமா? அன்னமிடும் தொழிலில் உன்னால் ஆபத்து வரலாமா? குடகு மலையில் தோன்றிய நீ குமரி நோக்கி வர மறுக்கலாமா? பிறந்த வீட்டில் அடைபட்டு இருக்கும் நீ புகுந்த வீடு வர மறுக்கலாமா? கன்னட நாட்டில் தோன்றியதால் எங்களை கண்டுகொள்ளாமல் இருக்கலாமா? அணைகள் கட்டியதால் வேளாண்மை என்னும் விளக்கு அணையலாமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தும் அதனை அலட்சியம் செய்யலாமா? வேளாண்மை வாரியம் தழைக்காமல் இருக்க மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கலாமா? வயிற்றுத் தீ அணைக்கக் கோரினால் வாகனங்களுக்கு தீயிடலாமா? வந்தோரை வாழ வைக்கும் பூமியை வாழ விடாமல் இருக்கலாமா? நிவாரணத்தை கூற வேண்டிய சர்கார் நிர்வாணத்தை கோரலாமா? அநியாயம் இழைக்கப்படுவது தெரிந்தும் ஆட்சியாளர்கள் அமைதி காக்கலாமா? கேள்விகள் பல இருந்தும் விடை அறியாத நாங்கள் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறோம் "நீ வருவாய் என!!!"

கனாக் கண்டேன் 2

Image
                           கனாக் கண்டேன் 2 "கனவு கண்டது போதும் போய் குளி" என்ற அம்மாவின் செல்ல அதட்டலுக்கு அஞ்சி ராகுல் படுக்கையில் இருந்து எழுகிறான். இருப்பினும் நடந்தவை கனவுதான் என இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. அவன் மீண்டும் அவனுடைய மொபைலை எடுத்து அதைப் பார்க்கிறான். அந்த Unknown number இல் இருந்து,                                                         My name is deepika என்று message வந்திருந்தது. அவன் அதைக் கண்டபடியே மொபைலை Charge இல் இணைக்கிறான். வழக்கத்தை விட பல முறை கண்ணாடியை பார்த்து வெளியில் செல்ல தயாராகிறான். ஆமாம் அவன் செல்வது அவனுடைய தோழி அனு வீட்டிற்குத்தான். ராகுல் தன்னுடைய Royal Enfield Himalayan யை வீட்டிற்க்குள் இருந்து வெளியில் எடுத்தான். அந்த வெண்மை நிற இரும்புக் குதிரையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். மாதம் ஒருமுறை ஏதாவது ஒரு மலைப்பகுதிக்க...

கனாக் கண்டேன்

Image
கனாக் கண்டேன் இரவை இருள் மூடிய பிறகும் இமைகள் இன்னும் அவன் விழிகளை மூடவில்லை. ராகுல் தனது மொபைலுடன் அவனுடைய நீண்ட எதிர்பார்ப்புகளில் ஆழ்ந்திருந்தான். அப்போது அவன் எதிர்பார்த்தபடி Hi... என்று Unknown number இல் இருந்து message வந்நது. காத்திருந்த அவன் விழிகளில் பூப்பூத்தது. அவனும் பதிலுக்கு hi... என்று அனுப்பினான். அதனுடன்                                                                  May I know your name???          என்று அவனுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினான். அந்தப் பக்கம் இருந்து                                                            I am your school friend!!!          என பதில் வந்தது. அந்த பதிலைத் தான் அவ...