நீ வருவாய் என!!!

                       நீ வருவாய் என!!!

உலகிற்கு உயிரோட்டமான நீரே
உன்னால் இன்னல் ஏதும் விளையலாமா?

அன்னமிடும் தொழிலில் உன்னால்
ஆபத்து வரலாமா?

குடகு மலையில் தோன்றிய நீ
குமரி நோக்கி வர மறுக்கலாமா?

பிறந்த வீட்டில் அடைபட்டு இருக்கும் நீ
புகுந்த வீடு வர மறுக்கலாமா?

கன்னட நாட்டில் தோன்றியதால் எங்களை
கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?

அணைகள் கட்டியதால் வேளாண்மை
என்னும் விளக்கு அணையலாமா?

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தும்
அதனை அலட்சியம் செய்யலாமா?

வேளாண்மை வாரியம் தழைக்காமல் இருக்க
மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கலாமா?

வயிற்றுத் தீ அணைக்கக் கோரினால்
வாகனங்களுக்கு தீயிடலாமா?

வந்தோரை வாழ வைக்கும் பூமியை
வாழ விடாமல் இருக்கலாமா?

நிவாரணத்தை கூற வேண்டிய சர்கார்
நிர்வாணத்தை கோரலாமா?

அநியாயம் இழைக்கப்படுவது தெரிந்தும்
ஆட்சியாளர்கள் அமைதி காக்கலாமா?

கேள்விகள் பல இருந்தும் விடை அறியாத
நாங்கள் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறோம்

"நீ வருவாய் என!!!"




Comments

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்