Posts

Showing posts from July, 2018

வீழாது தமிழ்!!!

Image
                                    வீழாது தமிழ்!!!   முன்னுரை :                    "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே    முன் தோன்றிய மூத்தக்குடி மக்கள் தமிழர்கள்" அவ்வாறு தோன்றிய மூத்தக்குடி மக்கள் பேசிய மொழி " தமிழ்". இந்த தமிழ் மொழியானது மற்ற மொழிகளைப் போல் வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் உதவும் மொழியாக இல்லாமல் கலாச்சாரம், பண்பாடு ,நாகரிகம், என அனைத்தும் கொண்ட மொழியாக உள்ளது. ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் இத்தாலியன் காதலின் மொழி என்றும் அறியப்படும் பொழுது நம் தமிழ் மொழியானது தாய்மொழி என நம்மால் கருதப்படுகிறது. மற்ற மொழிகளில் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் மொழியில் இலக்கண இலக்கிய நூல்கள் தோன்றிவிட்டன. இத்தகு சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழியின் ஒரு சீரியப் பண்பைப் பற்றி பொருளுரையில் காண்போம். பொருளுரை :                   ...

கனாக் கண்டேன் 4

Image
                              கனாக் கண்டேன் 4 கவிஞன் வடித்த காரிகையின் இடை என மெலிந்த வெண்ணிலா வில்லென வளைந்த வானத்தின் முனையில் மறைந்தும் மறையாமலும் தன் காதலனை கடைக்கண் கொண்டு பார்க்கும் காதலி போல் மதுரம் அருந்தி அதரம் சிவந்த நிறத்தில் தன் செவ்வொளியை வீசிக்கொண்டு எழும் சூரியனைப் பார்த்து மையல் கொண்டிருந்தது.          அவ்வழகான அதிகாலை வேளையில்  இரவு உறக்கத்தை தொலைத்துவிட்டு கண்விழித்து கனாக்கள் கண்ட ராகுல் தன் பல வருட கனவு தன் கண் எதிரில் உயிர்த்தெழுந்த சிற்பம் போல் அவள் வரப்போவதை எண்ணி  அத்தருணத்திற்காக தன்னை  என்றென்றும் இல்லாத அளவிற்கு சிறப்பாக தயார் படுத்திக்கொண்டான்.              ஒரு ஆண் தன்னை இவ்வளவு தாயார் படுத்திக்கொண்டான் என்றால்!!! பெண்ணைப் பற்றி கேட்கவா வேண்டும்???😊😄😆                            இருளை திரட்டி கோர்த்து வைத்தது போன்ற கருங்கூந்தலை ...

கனாக் கண்டேன் 3

Image
                            கனாக் கண்டேன் 3 வெண்ணிலா வெட்டி எடுத்து தேனில் நனைத்து செய்தானோ அவளின் தேகத்தை!!!வானவில்லின் வர்ணம் எடுத்து வஞ்சி அவளின் ஆடையென நெய்தவன் எவனோ??? பட்டுக் கரங்களுக்குள் பளிச்சிடும் மின்னலெடுத்து பதித்து வைத்தானோ அவளின் நகங்களை!!!  வண்ணத் தூரிகையில் தீட்டிய ஓவியமாய் அந்த காரிகை சினுங்கும் போது மென்பொருளால் ஆன செல்பேசியும் மையல் கொள்ளும் அவளிடத்தில்.                        இசைஞானியும் இசைப்புயலும் ஒருங்கு சேர்ந்து what's app status இல் மீட்டிடும் இசை மழையில் லயிக்கிறாள் அந்த பொன் வண்ண ரோஜா மலரான தீபிகா.  பாடல்கள் லட்சம் உண்டு ஆனால் நம் மனதில் எண்ணியவலுக்கான பாடல் இதுதான் என தேர்ந்தெடுத்து வரிசைப் படுத்துகிறான் ராகுல். அதைக் கண்டு அக்காரிகையின் செவ்வதரங்கள் சிவக்கின்றன. ராகுலின்  மனதிற்கு அவள் அதைப் பார்த்து விட்டாள் என்று தெரியும் போது அவ்விருதயம் சுமக்கும் உதிரம் ஒவ்வொரு துளியாய் உறைந்து அவன் மூளைக்குள் காதல...