கனாக் கண்டேன் 3

                            கனாக் கண்டேன் 3


வெண்ணிலா வெட்டி எடுத்து தேனில் நனைத்து செய்தானோ அவளின் தேகத்தை!!!வானவில்லின் வர்ணம் எடுத்து வஞ்சி அவளின் ஆடையென நெய்தவன் எவனோ???
பட்டுக் கரங்களுக்குள் பளிச்சிடும் மின்னலெடுத்து பதித்து வைத்தானோ அவளின் நகங்களை!!!
 வண்ணத் தூரிகையில் தீட்டிய ஓவியமாய் அந்த காரிகை சினுங்கும் போது மென்பொருளால் ஆன செல்பேசியும் மையல் கொள்ளும் அவளிடத்தில்.

                       இசைஞானியும் இசைப்புயலும் ஒருங்கு சேர்ந்து what's app status இல் மீட்டிடும் இசை மழையில் லயிக்கிறாள் அந்த பொன் வண்ண ரோஜா மலரான தீபிகா.  பாடல்கள் லட்சம் உண்டு ஆனால் நம் மனதில் எண்ணியவலுக்கான பாடல் இதுதான் என தேர்ந்தெடுத்து வரிசைப் படுத்துகிறான் ராகுல். அதைக் கண்டு அக்காரிகையின் செவ்வதரங்கள் சிவக்கின்றன. ராகுலின்  மனதிற்கு அவள் அதைப் பார்த்து விட்டாள் என்று தெரியும் போது அவ்விருதயம் சுமக்கும் உதிரம் ஒவ்வொரு துளியாய் உறைந்து அவன் மூளைக்குள் காதல் தீயை மூட்டிவிடுகின்றன. வார்த்தைகளால் பகிரப்படாத காதல் தரும் உணர்வினை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்னிடத்தில்.

                     இன்னும் ஒரு தினம் மட்டுமே உள்ளது கல்லூரி திறக்கப்படுவதற்கு அந்த நாளுக்காக காத்துக்கிடக்கின்றன கண்களில் காதல் நிறைந்த இந்த இரு இதயங்கள்.

                    இதே போல் மற்றொரு இதயமும்  தான் கொண்ட காதலை கவிதைகளாய் வடித்து அதைத் தானே அழகு பார்த்துக் கொண்டு காத்துக்கிடக்கின்றது தன் காதலை அவனிடத்தில் கூறும் அத்தருணத்திற்காக!!!. அந்த பதுமை வேறு யாரும் இல்லை ஸ்ரீ தான். அப்பதுமை கொண்ட காதலை பரிசாக தரவிருப்பது ராகுலிடம் தான்.

              பள்ளிப் பருவத்தில் பழகியவர்கள் என்றாலும் அவர்களின் இரண்டு வருட நட்பை ஒரு வருட பிரிவு காதலாக கனிய வைத்ததுவிட்டது. அக்காதல் தரும் மயக்கத்தில் தான் பலருக்கு கவிதை எழுத வருகிறது. ஸ்ரீ க்கும் அப்படித்தான் வண்ணம் தீட்டுவது அவளின் கனவு என்றால் இப்போது அந்தக் கனவுகளில் ராகுல் அல்லவா வர்ணங்களாக வருகிறான்.  அதனால் அக்காரிகை அவனை எண்ணி கவிதை வடிப்பதில் தவறில்லை.

                   கல்லால் ஆன இதயமும் காதல் வந்தால் கரைந்து விடும் என்பர் ஆனால் ராகுலின் இதயம்  மலர்களால் ஆனது அவ்விதயத்திற்குள் வந்த காதல்  அவனை காற்றில் பறக்கவைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அவனுடைய செயல்கலும் அப்படித்தான் இருந்தன. அரிதாகப் பூக்கும் குறிஞ்சி மலர்களில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் அம்மலர் மொட்டு விரிக்கும் அத்தருணத்திற்காக அதனைச் சுற்றிக் காத்துக்கிடப்பதைப் போல அவன் அவளைக் காணும் அத்தருணத்திற்காக ஆவலுடன் காத்துக்கிடந்தான். ஒரு ஒவ்வொரு நிமிடங்கள் கடப்பதும் அவனுக்கு யுகங்களைக் கடப்பது போல கடினமான இருந்தது. இருப்பினும் காதலின் இன்பம் காத்திருப்பில் தான் உள்ளது என்பதை அவன் உணர்ந்திருந்தான். எனினும் அவனுடைய காத்திருப்பு மிகவும் நீண்டது. அவன் எட்டு வருடங்களாக அவளைக் காணும் அந்த கணத்திற்காக காத்திருக்கிறான். இன்னும் அவனுடைய காதல் கைகூடுவதற்க்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் எனவும் அவனுக்கும் தெரியாது. என்னைப் போல!!!
இருப்பினும் அக்காத்திருப்பின் காலத்தை காதல் தரும் மகிழ்ச்சியுடன் கடந்துகொண்டு இருக்கிறோம் நானும் ராகுலும்.
           

     இந்த கதையின் சுவாரஸ்யமும் பல உண்டு. ஒரு கதை. பரிமாற்றிக்கொள்ளப்படாத இரண்டு காதல். கனவுகளுடன் மூன்று இதயங்கள்.   என  கல்லூரி காதலை நோக்கி இக்கதை பயணப்பட உள்ளது.

                 எட்டு வருடங்களுக்கு முன் அறியாமல் புரியாமல் வளர்ந்த ராகுலின் காதல் ஒருபுறம். பார்த்து பேசி பழகி கனிந்த ஸ்ரீ யின்   காதல்  மறுபுறம் என காதலின் இருவேறு கோணத்தை  கதையாய் வடிக்க காத்திருக்கிறேன் நான்.........
   
                  நான் கானும் இக்கனா தொடரும்......
கல்லூரி நினைவுகளுடன்!!!!💕💘💕
             


   
             
                 


                   
 
                         
               
                     
                       

                   

Comments

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்