இரவில் ஒரு பயணம் கார்குழல் வானில் மின்னிடும் வெண்ணிற மல்லிகை மொட்டுக்களின் அணிவகுப்பு பௌர்ணமி கடந்து தினங்கள் ஆயினும் கார்குழல் வானிற்கு இடையில் பிரகாசிக்கும் முழுநிலவொளி வெயிலும் அல்லாமல் மழையும் அல்லாத பொழுதிலும் இரவில் இருண்டு காணக்கிடைக்கும் வானவில்கள் ஆளைப் புரட்டிப்போடும் புயல் மழைக்கு சித்தமாக,வண்ண மயில்கள் தோகை விரிக்கும் பொழுதில் கண்ணைப் பறிக்கும் யுகநேர மின்னல் வெட்டு்க்கள் சூறைக்காற்றைத் தோற்க்கடிக்க மலைக்குகைகளில் இருந்து வீசும் சூடான தென்றல் காற்று தேனெடுக்க வண்டுகள் தேடியலையும் தேன்வடியும் ஜோடி செங்காந்தள்கள் ஆழிப்பெருங்கடல்களிலும் காணப்பெறாத இரட்டை வெண்ணிற பவளப்பாறைகள் அதற்கடியில் குயிலினும் இனிய சப்தத்தை எழுப்பும் ஒற்றை வலம்புரிச்சங்கு என இரவின் இனிமையும் வளமையும் மேலும் தொடர்ந்து கொண்டிருக்க அவற்றை வர்ணிக்க வார்த்தையின்றி இனிமையை எண்ணி மனம் செல்ல "இரவின் பயணம்" தொடர்கிறது. ...
Comments
Post a Comment