கலங்கும் என் விழிகள்!!!

              கலங்கும் என் விழிகள்!!!


மனம் காணும் மார்க்கம்
உண்மை அறிந்த கண்களுக்கு அகப்படவில்லை!!!

காரணமின்றி கலைக்கப்பட்ட மனம் காண்பது
வெறும் கனவென்று அதற்கு தெரியவில்லை!!!

கண்ணாடியை நோக்கி எறியப்பட்ட கல்
அக்கண்ணாடியில் ஏற்றபட்ட காயத்தை ஆற்றுவதில்லை!!!

ரோஜாவை பறிக்கும் கரங்கள் காயப்படுவதில்
ரோஜாவின் மீது குற்றமில்லை!!!

நிகழ்வதை அறிய தெரிந்த மூளைக்கு 
மனதுக்கு புரியவைக்க தெரியவில்லை!!!

பூக்களை நாடி வரும் வண்டுகள் அதில்
மயங்கிக் கிடப்பதில் வண்டுகளின் மீது தவறில்லை!!!

மனம் என்று ஒன்று இருந்தால் அதில்
மயக்கங்கள் வருவது புதியதில்லை!!!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று
மனதுக்குத்தான் தெரியவில்லை!!!

மாற வேண்டும் என தெரிந்த மனதுக்கு
அதற்கான வழிகள்தான் புரியவில்லை!!!

புரிந்து கொண்ட வழி ஏற்படுத்தும்
வலிகளை புரிந்து கொண்டவர் அறிவதில்லை!!!

வழியை விட்டு விலகுவதைத் தவிர
வேறு வழி எதுவும் தெரியவில்லை!!!

காலங்கள் கடந்தாலும் கல்வெட்டின் 
எழுத்துகள் மாறுவதில்லை!!!

இப்படிக்கு
காயப்பட்ட மனதுடன் கனவுகளிலும்
கலங்கும் என் விழிகள்!!!




Comments

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்