இருதயம் இருகுகிறது!!!
நேற்றைய நினைவுகள் இன்றைய
நிகழ்வைத் தீர்மானிக்கிறது!!!
விழி தந்த வலிகள் வழி அறியாது
இதயத்தை அடைந்து அடைக்கலம் பெறுகிறது!!!
காலத்தில் கரைந்து போன காலங்கள்
மீண்டும் கை கூடாதா என
கலக்கத்தில் திழைக்கிறது நெஞ்சம்!!!
நிகழ்ந்தவை நினைவுகளாகக் கொல்ல
நிகழ்பவை நினைவுகளை
நினைவுபடுத்துகிறது!!!
எதிர்கால வாழ்வு என எண்ணியது
நிகழ்கால வாழ்வை
நித்தமும் ரணமாக்குகிறது!!!
உயிரோடு உயிராய் கரைந்து விட்டது
என எண்ணியது
உயிருடன் உயிரை உறைய வைக்கிறது!!!
மாற்றங்களுடன் மாறிய இதயம்
என எண்ணியது
உயிருடன் உயிரை உறைய வைக்கிறது!!!
மாற்றங்களுடன் மாறிய இதயம்
மறுபடியும் மனம் மாறிவிடாதா
என மனம் நாடுகிறது!!!
இருகின்ற நிமிடங்கள் இல்லாமல் இருக்க
இல்லாத ஒன்றை இருக்க வேண்டும் என
எண்ணி இருதயம் இருகுகிறது!!!
என மனம் நாடுகிறது!!!
இருகின்ற நிமிடங்கள் இல்லாமல் இருக்க
இல்லாத ஒன்றை இருக்க வேண்டும் என
எண்ணி இருதயம் இருகுகிறது!!!
Comments
Post a Comment