கனாக் கண்டேன் 5

                           கனாக் கண்டேன் 5



பூலோகத்திற்குள் உள்ள தனி உலகம். காலத்தால் என்றும் அழியாத நினைவுகளின் கருவூலம் கல்லூரி . இந்தக் கல்லூரி வாழ்க்கை தான் கட்டற்ற வானில் கவலை இல்லாமல் சிறகடித்துப் பறப்பதற்கு பலருக்கு சிறகுகளைத் தருகிறது. அந்தச் சிறகுகளைக் கொண்டு அவர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாழ்க்கையின் திருப்பு முனையாவும் உள்ளது.

              ராகுலுக்கும் அப்படித்தான் அவனுடைய  இந்தக் கல்லூரி வாழ்க்கையை பல கனவுகளுடன் காதலையும் கொண்டுள்ள அவன் எவ்வாறு கடக்க போகிறான்??!...
பார்ப்போம் ✍✍✍

                  வாகன நெரிசல் நிறைந்த நகரத்தில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன்  முக்கிய சாலையில் இருந்து கல்லூரி பேருந்து 🚌 சிறிய சாலை வழியாக செல்கிறது. சாலையின் இருபுறமும் வயல்வெளி ஆங்காங்கு மரங்கள் என அழகிய சோலை வழியாக செல்லும் சாலையின் வழியாக பேருந்து செல்கிறது 🚌.   கல்லூரியின் பின்புறம் வரிசையாக நிற்க்கும் பேருந்து அணிவகுப்பில்  இந்தப் பேருந்தும் கலந்துக் கொள்கிறது. பேருந்தில் இருந்து இறங்கியவுடன் அவளிடம் பேச வேண்டும் என எண்ணிய ராகுல் அவள் இருக்கும் திசை நோக்கியே தன் கண்களை காற்றில் அலைய வைத்தான். இருப்பினும் அவள் அவனை திரும்பி பார்க்கக்கூட மனமில்லாமல் அவள் வழியே சென்று விட்டாள்.💕💕💔

            அங்கிருந்து செல்லும் அவளை ராகுலால் பார்க்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை. எட்டு வருடங்கள் அவளுக்காக  காத்திருந்த அவன் இன்னும் இரண்டு வருடங்களில் அவனுடைய காதலை அவளுக்கு புரிய வைக்க முடியாதா என்ன???💕💕💗

             கலங்கிய மனதுடன் இருந்த ராகுலின் கரங்களை பற்றினால் ஸ்ரீ அவனிடம், "என்ன ஆச்சிடா ஏதாச்சும் problemஆ??? " எனக் கேட்டாள் அவள் ஒன்றும் இல்லை எனக் கூறியது அவன்  உதடுகள். பிறகு இருவரும் அவர்களுடைய Department க்கு சென்றார்கள். ராகுலும் ஸ்ரீயும் ஒரே Department அது B.sc (computer science) 💻.
   
               கட்டற்று வளர்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்ப உலகின் முதுகெலும்பு கடந்த நூற்றாண்டுகளின் சாதனை  எதிர்கால சரித்திர யுகத்தின் திறவுகோல்.
            💻 கணினி அறிவியலாளர்களின் அறிவை அடிப்படையாகக் கொண்டு அறிவியலால் அளவிட முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து தொழில்நுட்பவியலில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அறிவியலின் போக்கை ஆட்டிப்படைக்க இருக்கும் அந்தக் கணினியைப் பற்றி கற்பதற்காகத்தான் ராகுல் இந்த Departmentயை தேர்ந்தெடுத்திருக்கிறான்.

                       ராகுல் ஸ்ரீ மற்றும் அனு மூவரும் அவர்களுக்கான Computer Science Department க்குள் நுழைகிறார்கள்.
 அழகிய வெளித்தோற்றம் கொண்ட அந்த Department block கணினித் துறைக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட தனி சொர்க்க பூமி 🌏 💻.  முதலாமாண்டு மாணவர்கள் இன்னும் வராத நிலையில் நன்கு பழக்கப்பட்ட அந்த பகுதி சற்று வெறிச்சோடி இருந்தது. அந்தப் பகுதிக்கு புதிதான ஸ்ரீ அந்த இடத்தை சற்று நோட்டமிட்டால். மூன்றடுக்கு கட்டிடம் தரைத்தளத்தில் கணினி 💻  துறையின் Staff Room. முதல் தளம் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கானது, இரண்டாம் தளம் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கானது. மூன்றாம் தளம் தவிர்க்கப்பட்ட பகுதி அங்கு செல்ல அனுமதி கிடையாது.

                  ஸ்ரீ,ராகுல்,அனு மூவரும் முதல் தளத்தை நோக்கி செல்கிறார்கள். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, "மொத்தம் நான்கு வகுப்புகள் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்"

              கட்டற்ற ஆற்றல் உள்ள கணினியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என சிலர்!!!
             கிட்டிய துறைகளை விட அதிக கஷ்டங்கள் இல்லாத துறை இது என சிலர்!!!
                காண்பவரெல்லாம் கணினி கற்றால் நல்லது என கூறியதாக சிலர்!!!
                  கண் கண்ட நண்பன் இதைத் தேர்தெடுத்ததால் கண் மூடிக் கொண்டு சேர்ந்த சிலர்!!!
                   கண்களைக் கட்டி கைகளை நீட்டி தேடியதில் கடைசியாக அகப்பட்ட துறை இது என சிலர்!!!
 
                          காரணம் எதுவாக இருந்தாலும் அனைவரும் பயணிப்பது ஒரே வழியில் தான்.

                   இந்த வழி அனைவருக்கும் மிக கடினமாகவம் இருப்பதில்லை அதே சமயம் மிக சுலபமாகவும் இருப்பதில்லை அது எவ்வாறு இருக்க வேண்டும் என தீர்மானிப்பது அவரவர் கரங்களில் தான் உள்ளது. ஆனால் பலர் அதனை புரிந்து கொள்வதற்குத்தான் சற்று அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள். சிலருக்கு அதனை புரிந்து கொள்வதற்குள் கல்லூரி வாழ்வு முடிந்து விடுகிறது.

                 ஏனெனில் இந்த கல்லூரி வாழ்வு பாடங்களை மட்டும் கற்று கொள்வதற்கு அல்ல!!! வாழ்க்கையை பற்றிய ஒரு புரிதல்,சமுதாயத்தில் பங்கெடுத்து மேம்படுத்துவதற்கான ஒரு பார்வை, வாழ்க்கையில் எதிர் கொள்ளப் போகும் சிக்கல்களை சமாலிக்க மனஉறுதி, அந்த மனஉறுதியை மேலும் வலுப்படுத்த நண்பர்கள்!!! என வளமான வாழ்விற்கு உரமிடும் பருவம் இது!!!

                         இந்த பருவத்தில் தான் பலருக்கும் பரிட்ச்சியப்பட்ட காதல் எனும் கனா தோன்றுகிறது அல்லது தோன்றிய கனா தொடர்கிறது.
           ராகுல் இதில் இரண்டாவது வகை அவனுள் தோன்றிய காதல் ❤️ காலங்கள் கடந்து கலகங்கள் பல அவனுள் புரிந்து கனவு நினைவாகும் தருணமாக அவனிடத்தில் சேர சந்தர்ப்பங்களை வழங்குகின்றது.

                      சந்தர்ப்பங்கள் பல வாய்க்கப் பெற்றாலும் அக்காதல் கைகூடுவது காலத்தின் கரங்களில் தான் உள்ளது. ஆனால் அந்தக் காலம் கூட கன்னிகளில் கண்ணசைவில் கட்டுப்பட்டு உள்ளதோ தெரியவில்லை???🔒👀🔒
                 அந்தக் காலத்தால் கூட கன்னிகளின் மனதில் இருப்பதை அறிய இயலாது!!! எனில் ராகுலுக்கும் அது சாத்தியமில்லை!!!
     
                      அவனைக் கண்ணெடுத்தும் பார்க்காமல் சென்ற அவளுடைய கண்கள் மட்டும் தான் அவன் கண்களுக்குத் தெரிகிறது.
அவனை அறியாமலேயே அவள் மனதை புண் படுத்தி விட்டோமோ??? என எண்ணி ராகுல் கலங்குகிறான். அவளுக்கு அந்த நிகழ்வு வலியை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என நினைத்து இவன் மனம் வலியில் துடிக்கிறது!!!💕😢💕

                       காதலில் அகப்பட்டவர்களுக்கு அந்த காதல் ஏற்படுத்தும் வலிகள் கூட அவர்கள் காதலித்தவர்களை மேலும் நினைவுபடுத்துவதால் வலிகளும் வரங்களாக மாறி விடுகின்றன இக்காதலில்!!!
                     
                       இருவர் பேசி பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்களுடன் அதிக நேரம் செலவழித்து தன்னுடைய விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொண்டு ஒட்டி உறவாடி பொழுதுகளை கழிப்பது மட்டும் காதல் இல்லை!!!
                              நெஞ்சத்தில் நினைத்து நினைவில் வாழ்ந்து அவளைப் பற்றிய எண்ணங்களுக்கு உருவம் தந்து அவள் அருகாமையில் இல்லா விட்டாலும் அவளது நினைவுகளை நினைவுபடுத்தி காதல் ❤️ உணர்வை அனுபவித்து அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவள் மனம் காயப்பட்டு விடும் என தன் மனதை காயப்படுத்திக் கொண்டு காதலை மனதுக்குள் தேக்கிவைத்துக் கொண்டு இருக்கும் "வார்த்தைகளால் பகிரப்படாத காதலும் காதல் தான்!!!"💕💕💘

                   ராகுலின் காதலும் வார்த்தைகளால் பகிரப்படாத காதல் தான்!!!
             

                  வார்த்தைகளை உதிர்ப்பதற்கு சில கணங்கள் கூட ஆகாது எனினும் அந்த வார்த்தைகளுடன் இவன் விதைக்கும் கனா செடியாய் வளர்ந்து பூப்பூக்குமா??? இல்லை நஞ்சாய் மாறி மண்ணை காயப்படுத்தி விடுமா??? எனத் தெரியாமல் கலங்கும் இவனுக்கு காலமும் கல்லூரியும் உதவுமா???


                                               இவன் கண்ட கானா கைக்கூடுமா??? ✍✍✍

                     
                 

                               


               

                   

                         



                 

         

                                     

               

           

                

Comments

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்