No Way!!! (Monster)-1

No Way!!!

(Monster)-1


           " Come on...Quick!!! Mom இப்பவே Late ஆயிடிச்சி Flight Miss ஆகிட போது!!!"

" Ohh Wait... ரோஹன் Bag pack பண்ணணும்ல.  சிங்கப்பூர்ல இருந்து சென்னைக்கு College Leaveல போறனு தெரிஞ்சதுல இருந்து உன்ன கைலயே பிடிக்க முடியல!!! "

         " பின்ன இல்லயா 5 வருசத்துக்கு அப்பறம் அவனோட தாத்தா ஊருக்கு போக போறல So Excitement இருக்கத்தானே செய்யும். அப்படிதானே ரோஹன்???  " ,என ரஞ்சித் கேட்டார்.

          " Of Course Dad I'm So Excites About That!!! ", என ரோஹன் கூறினான்.

            " ஆமா உன் Friend ரிதன்யா எங்க அவள் இன்னும் காணோம் ", என மலர் கேட்டாள். "நான் அவளக்கு Call பண்ணிட்ட Mom அவ இன்னும் 10 minutes Air Portக்கு வந்துடவா!!!", என ரோஹன் கூறினான்.

        "நான் கிளம்ப வேண்டியது தான் இன்னும் Balance!!!"

       "OK Rohan Bags லாம் வண்டில வைச்சிட்ட Chennai Reach ஆயிட்டு Call பண்ணு!!! Driver உன்ன Air Portல Drop பண்ணிடுவாறு Have a Nice Journey", என ரஞ்சித் கூறினான்.

                                          "Ok  Honey Bye!!! 👋
உன் தாத்தாவ ரொம்ப Disturb பண்ணாத!!!", என மலர் கூறினாள்.

                                           "Yes Mom Bye!!!👋"
Flight Landed At Chennai

       "Heyyyy Rohan நான் இங்க தான் இருக்க!!!", என ஸ்ரீ Air Portல் ரோஹனை நோக்கி உரக்க கத்தினான்.

                            " I See you....Wait!!!", என ரோஹன் ரிதன்யாவுடன் ஸ்ரீயை நோக்கி வந்தான்.

                   " Hi...Sri!!! பார்த்து எவ்வளவு வருசம் ஆச்சி??? " என ரோஹன் கேட்டான்.

                    " My Dear Bro....!!! 5 yesrs ஆச்சிடா உன்ன நேர்ல பார்த்து", என ஸ்ரீ கூறி இருவரும் கட்டி தழுவிக் கொண்டார்கள்.

                   "Hello...ஸ்ரீ எப்படி இருக்க???", என ரிதன்யா ஸ்ரீயிடம் நலம் விசாரித்தாள்.

                   "Mm....I'm Fine Rithanya Welcome To Chennai!!!", என ஸ்ரீ அவளை வரவேற்றான்.

                  "ரோஹன் நம்ம கார் வெளிய இருக்குது அங்க அப்பா Wait பண்ணிட்டு இருப்பாறு Bag லாம் எடுத்துகிட்டிங்களா??? கிளம்பளாமா???", என ஸ்ரீ கூற ரோஹனும் ரிதன்யாவும் தலையசைத்து அங்கிருந்து நகர்கிறார்கள்.

                     Parking Areaவில் ரோஹனுடைய சித்தப்பா ரவி இவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்தார்.

                     " Heyyy ரோஹன் எப்படி இருக்க???", என ரவி கேட்டார்.
                         "I'm Fine சித்தப்பா! ",என ரோஹன் பதிலளித்தான்.

                        "Ok  guys Let's Get Into The Car", நாம கிளம்பளாம்.

Car Reached The Home
              
   ரவியின் மனைவி ராதிகா அவர்களுக்காக வீட்டின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தார்.

         காரை விட்டு இறங்கிய ரோஹன் அவர்களை சித்தி என்று அழைத்து அவர்களை நோக்கி ஓடினான். 

                    ஸ்ரீ மற்றும் ரிதன்யா அவனை தொடர்ந்து வந்தனர். ராதிகா அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். 

                    பயணக் கலைப்பு தீர்ந்த பிறகு அனைவரும் இரவு உணவு உண்பதற்காக உணவு மேசை அருகில் கூடினர்.
           
              "ஆமா  ரோஹன் உன்னோட Studiesலாம் எப்படி போய்கிட்டு இருக்கு?" ,என ராதிகா கேட்டார்.

                 "Mm...Good சித்தி இப்போ College Leaveல தான் கொஞ்சம் Freeஆ இருக்க இல்லன Final Year Projects  Assignments அப்படி இப்படினு ஆயிரம் இருக்கும்", என ரோஹன் கூறினான்.

                  "And...ரிதன்யா நீ இந்த வருசமும் University Topper தானே?",என ராதிகா கேட்டார்.

                "Yes.....Aunty Next year கண்டிப்பா Gold Medalistஆ தான் Collegeஅ விட்டு வெளிய வருவ!!!", என சற்று பெருமிதத்துடன் கூறினாள்.

                  நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த இவர்களுடைய அரட்டைகள் தொடர்ந்து கொண்டிருக்க....!!!  ரவி தனக்கு வந்த போனை எடுத்து காதில் வைத்தவாறு பேசிக் கொண்டே வெளியில் வெளியில் சென்றார்.

                 Gardenக்கு வந்த அவர் சுற்றிலும் பார்த்து விட்டு, "Mm.....இப்ப சொல்லுங்க அப்பா பக்கத்துல யாரும் இல்ல!!!", எனக் கூறினார்.

           "ரவி நான் சொல்றத கவனமா கேளு!!! இப்ப இங்க என்ன பிரச்சன போய்க்கிட்டு இருக்குனு உனக்கும் நல்லா தெரியும் இருந்தாலும் பசங்க இங்க வர்றதுக்கு நான் ஒத்துகிட்டதே ரோஹனுக்காக தான்!!!  ஆனா எனக்கு என்னமோ பயமா இருக்குடா??? இன்னிக்கி கூட பக்கத்து தெரு பாய் பய்யன் அத தேடி போய் காணாம போய்ட்டான்.  ஊர்ல இருக்கரவங்க எல்லாம் பயந்து போய் இருக்காங்க!!!", என புலம்பல் சத்தம் மறுமுனையில் இருந்து கேட்டது.

          "அதேல்லாம் ஒன்னும் ஆகாது அப்பா.....!!! நீங்க தைரியமா இருங்க!!! நாளைக்கு பசங்க அங்க வந்துடுவாங்க....அவங்கள மட்டும் கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க!!!"
         "Mm.....அப்பறம் ஒரு முக்கியமான விசயம் அங்க நடக்கறது எதுவும் பசங்களுக்கு தெரிய வேணாம்...!!!", என ரவி ஆறுதலுடன் அச்சுறுத்தலையும் அடிக்கோடிட்டுக் கூறினார்.

             "Mm....சரிப்பா நான் பாத்துக்கர",என்று கூறிவிட்டு Call Cut  ஆனது. 

             பதற்றத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ரவி வீட்டிற்குள் வந்தார். 
              "யார் Dady Call பண்ணா???", என ஸ்ரீ கேட்டான்.
            
                 " ஊர்ல இருந்து உங்க தாத்தா தான் Call பண்ணாறு நீங்க எப்போ ஊருக்கு வருவீங்கனு கேட்டாறு!!!",என ரவி பதிலளித்தார்.

                   "ஆமா  ரோஹன் அந்த ஊரு பேரு என்ன???", என்று ரிதன்யா கேட்டாள். 

                  "Mm....அது தர்மபுரில இருந்து ரொம்ப Interior Forests க்குள்ள இருக்கற ஒரு கிராமம்"

                     "அந்த கிராமத்து பேரு 'அகத்திய கிராமம்' அங்க Fullஆ காடு மலை அப்படினு நிறைய Beautiful ஆன Places இருக்கும்", என ரோஹன் பதிளலித்தான்.

    "சரி நான் இத்தன வருசத்தல இப்போதானே அங்க வர போற  பாக்கலாம் அங்க என்னலாம் இருக்குனு???", என ரிதன்யா கூறினாள்.

                     "சரி சரி எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தது போதும் போய் சீக்கிரமா தூங்குங்க!!! காலைல தாத்தா ஊருக்கு போகனும்ல?!?",என ராதிகா கேட்டார்.

                   "சரி ok....Mom Good night நானும் ரோஹனும் என்னோட Room லேயே படுத்துக்கறோம்", என ஸ்ரீ கூறிவிட்டு ரோஹனை அழைத்துக் கொண்டு சென்றான்.

                  "Ok.....Aunty Good night நானும் போய்த் தூங்கர",எனக் கூறிவிட்டு ரிதன்யாவும் சென்றாள்.

         "டேய் ரோஹன் தூங்கிட்டியா???", என ஸ்ரீ ரோஹனை தட்டிக் கேட்டான். 

          " இல்லடா இன்னும் தூக்கம் வரல!!! நீ இன்னும் தூங்கலயா???",என ரோஹன் ஸ்ரீயைத் திருப்பிக் கேட்டான். 

             "சரி இங்க வா நான் உனக்கு ஒன்னு காட்ற!!!", எனக் கூறிவிட்டு தன்னுடைய  Bedக்கு கீழே இருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். 

                அந்த பெட்டி முழுக்கவும் Electronic Gadgets களாக இருந்தது. அதைப் பார்த்த ரோஹன்,
"Hey...Bro நீ இன்னும் மாறவே இல்லனு பாத்தா!!! நீ இவ்வளவு Develop ஆயிட்ட Mm....Alright இதல  எது எது நீ Design பண்ணது???", என ரோஹன் ஆர்வமுடன் கேட்டான். 
                     "Actually.......இதுல  இருக்கறது எல்லாம் நான் Ready பண்ணது தான்", என ஸ்ரீ சிரித்துக் கொண்டே கூறினான்.

                   " Wow Bro.....Well Done சரி காட்டு பாக்கலாம் உன்னோட Gadgetsஅ???", என ரோஹன் கேட்டான்.

                   "Mm.....Look Here This is My Favorite Drone With Camera,  இது Mini Electrical Wave Generator , இது GPS Hand Bands, And This One Is Electrical Shocking Pen , And here is a Arc Reacter இதுல இருந்து Infinity Electrical Power Supply கிடைக்கும் , And இந்த மாதிரி இன்னும் இருக்கு!!!" , என ஸ்ரீ அந்த பெட்டியில் இருந்த பொருட்களுக்கு விளக்கம் அளித்தான். 

                      "Very....Cool and Amazing Bro நீ!!!", என ரோஹன் ஸ்ரீயுடைய திறமைக்கு புகழாரம் சூட்டினான்.

                     "சரி வா போய்த் தூங்கலாம் Morning ஊருக்கு கிளம்பனும்!!!", என ஸ்ரீ கூறிவிட்டு அந்த பெட்டியை ரோஹனுடைய பைகளுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு தூங்க சென்றான்.
ரோஹனுக்கும் தூக்கம் இமைகளின் வழியேக் கண்களை தழுவியது😴.


"Good Morning.... Good Morning.... Good Morning📱🎶!!!", என அழைத்து Phone ரோஹனை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.

               "Hey.....ஸ்ரீ விடிஞ்சிடிச்சிடா எந்திரி போய் ரெடி ஆகனும்", என ரோஹன் ஸ்ரீயை தட்டி எழுப்பினான்.

                    "நீ First ரெடி ஆகுடா நான் இன்னும் ஒரு 15 Minutes தூங்கர", என ஸ்ரீ கண்களைக் கூடத் திறக்காமல் பதிளலித்தான்.
                  ரோஹனும் சென்று புறப்படுவதற்குத் தயாரானான்.
       
                   "ரோஹன்.....ஸ்ரீ.......!!!! இன்னும் என்ன பண்றீங்க??? சீக்கிரம் ரெடி ஆயிட்டு வாங்க!!!", என ராதிகா அழைத்தார். அப்போது படியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த ரோஹன்
             "சித்தி நான் ரெடி ஆகிட்ட ஸ்ரீதான் இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கான்", எனக் கூறினான்.
                     " அவனுக்கு இதே வேளையாப் போச்சி நீ வந்து Coffee குடி நான் போய் அவன எழுப்பற!!!", எனக் கூறிவிட்டு மேலேச் சென்றார் ராதிகா.
                    

     சில மணி நேரங்கள் கடந்தன....🕙 ஒரு வழியாக அனைவரும் புறப்படத் தாயாரானார்கள்.
  
                       "Dady....lagages லாம் Carல வைச்சிடிங்கல??? என் Bag Roomல இருந்திச்சி அது எடுத்துட்டு வந்துடீங்கல???", என கேள்விகளை அடுக்கினான்.

                    "நான் எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்ட நீ எந்திரிக்க Late பண்ணதால தான் இப்போ இவ்வளவு நேரம் ஆயிடிச்சி!!!   நீங்க சீக்கிரம் கிளம்புங்க அங்க உங்க தாத்தா Wait பண்ணிகிட்டு இருப்பாறு!!!", என அனைவரையும் அவசரப்படுத்தினார்.

                     "நீங்க வேற அவன  ரொம்ப அவசரப் படுத்தாதீங்க அப்பறம் வேணும்னே அவன் வண்டிய ரொம்ப வேகமாக ஓட்டுவான்!!!", என ரவியைத் திட்டினார் ராதிகா.

                 " ஸ்ரீ ஒழுங்கா Medium Speedல வண்டிய ஓட்டிட்டு போகனும் நான் ரிதன்யாவுக்கு அப்பறம் Call பண்ணி கேப்ப!!!", என ஸ்ரீயை மிரட்டினார்.

                 "okay....Mom...Ok!!! சரி நாங்க கிளம்பரோம் Bye!!!", என ஸ்ரீ கூறினான்.

               ரோஹனும் ரிதன்யாவும் அவர்களிடம் இருந்து விடைப்பெற்றுக் கொண்டு Carஇல் ஏறினர்.

               கார்🚗 தருமபுரி மாவட்டத்தை நோக்கிச் சென்றது!!!

                தர்ம்புரியில் இருந்து  ஒன்றரை மணிநேர பயண தொலைவில் தொடங்கும்  Forest Covered பகுதிகள் வழியே உள்ளேச் சென்று சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பெரிய மரப் பாலத்தின் வழியேச் சுற்றிலும் காடுகள் நிறைந்த மண் சாலையின் வழியாக கார் மெதுவாகச் சென்றது.

          "See....ரிதன்யா இந்த வழியில Only Morning Timeல தான் வர முடியும் Eveningக்கு அப்பறம் இந்த Root கொஞ்சம் Dangerous", என தொடக்கத்திலேயே ரோஹன் ரிதன்யாவை பயமுறுத்தினான்.

      "ஏய் என்ன சும்மா பயமுறுத்தாத நான் ரொம்ப தைரியமான பொண்ணு தான்!!!", என ரிதன்யா பதிளலித்தால்.

                "ஓஹோ அப்படியா ரிதன்யா!!!", என ஸ்ரீ மற்றும் ரோஹன் ஒன்றாக சேர்ந்து கேட்டு அவளைக் கிண்டல் செய்தனர்.

                 அதற்கு ரிதன்யாவின் கைகள் ரோஹனை அடிப்பதற்கு ஓங்கின!!!. அப்போது திடீரென்று Car Off ஆனது.
            அனைவரும் ஒரு நிமிடம் அமைதி ஆனார்கள்.

              ஸ்ரீ சாவியின் காதை இரண்டு மூன்று முறை நன்கு திருவினான். ஆனால் Car மீண்டும் Start ஆகவில்லை!!! 
              மூவரும் காரில் இருந்து கீழே இறங்கினார்கள்.

                 "God.....Dame!!! இன்னும் 10 Kilometers தான் இருக்கு இப்போ போய் வண்டி Off ஆயிடிச்சி!!!", என ஸ்ரீ கோபத்துடன் வண்டியைத் திட்டினான்.
  
               " டேய் வண்டிய திட்றத நிறுத்திட்டு என்ன ஆச்சினு First பாரு!!!", என ரோஹன் கூறினான்.
   
                     "Mm.....இரு பாக்கற!!!" ,என Bonnet யைத் திறந்தான். 
                சிறிது நேரம் கழித்து ,"ரோஹன் Radiatorல தண்ணி இல்ல!!! வண்டில Water Bottle இருக்கும் அத எடுத்துட்டு வா!!!", எனக் கூறினான்.

                 "ஸ்ரீ Water Bottle தான் இருக்கு ஆனா அதல தண்ணி இல்ல!!!" , என ரோஹன் சத்தமிட்டான்.

                     "Ohh....God....!!!சரி இரு இங்க பக்கத்துல ஒரு ஓடை இருக்கும் நான் போய் தண்ணி எடுத்துட்டு வர!!!   நீங்க இரண்டு பேரும் இங்கயே இருங்க!!!", எனக் கூறிவிட்டு ஸ்ரீ Bottleயை வாங்கிக் கொண்டு சென்றான்.

                     மண் பாதையில் இருந்து சற்று விலகி மரங்கள் நிறைந்த வழியில் உள்ளே சென்றான் ஸ்ரீ. சிறிது தூரம் உள்ளே சென்றவுடன் ஓடையின் சலசலப்புச் சத்தம் கேட்டது.

            ஆனால் ஓடையின் சலசலப்புச் சத்தத்தையும் கடந்து ஸ்ரீக்கு அழுத்தமான காலடிச் சத்தம் ஓடைக்கு மறுபுறம் இருந்து கேட்டது....?!?

              ஸ்ரீ சற்று அச்சத்துடன் மெதுவாக முன்னோக்கி சென்றான். ஓடைக்கு அருகில் எதுவும் இல்லை என்பதை நன்கு கவனித்த ஸ்ரீ Bottleஇல் தண்ணீரை நிரப்பினான்.

            அப்போது யாரோ வேகமாக ஓடுவது போல் சத்தம் கேட்டது ஸ்ரீக்கு. ஸ்ரீ சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தான். 

            அங்கு தூரத்தில் ஒரு மிருகதைப் போல ஒரு உருவத்தை அவன் கண்டான். சாதாரண மனிதனை  விட அதிக உயரம் கொண்ட உடல் முழுவதும் ரோமம் கொண்ட மனிதனைப் போல நடக்கக் கூடிய ஒரு மிருகம் ஓடைக்கு அந்தப் பக்கம் வேகமாகச் செல்வதைப் பார்த்தான் ஸ்ரீ.
                  
            அவனுடைய கால்கள் நகரவில்லை கைகள் நடுங்கியது அவனுடைய கண்கள் கண்டதை மூளை நம்பவில்லை!!!

               அதைக் கண்டதும் அவன் உதடுகள் நடுக்கத்தில் உதிர்த்தது 'Monster'!!!

                       அவனுடைய மனம் படபடத்தது, அவனுடைய மூளைக்கு நரம்புகள் வழியே இரத்தம் வேகமாக ஓடியது, ஸ்ரீ பயத்தில் மயங்கி கீழே விழுந்தான்.



                                                          - To Be Continued

Comments

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்