சோடியம் பேட்டரிகள் 🔋

                சோடியம் பேட்டரிகள்




அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு நகரைச் சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று ஷெனான் பாவ் தலைமையில் கூடி, புதிய வகை பேட்டரி நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் அரிய வகை லித்தியம் தாதுவைப் பயன்படுத்தி, அதிக செலவில் லித்தியம் அயன் பேட்டரியை தயாரிப்பதைவிட எளிதாகக் கிடைக்கும் சோடியம் அயனிகளைப் பயன்படுத்தி கூடுதல் சக்திவாய்ந்த பேட்டரியை உருவாக்க முடியும் என்று அவர்கள் நிரூபித்துள்ளனர். இவர்கள் உருவாக்கி உள்ள சோடியம் அயன் பேட்டரிகள், இப்போதைய லித்தியம் அயன் பேட்டரியைவிட 87 சதவீதம் கூடுதல் சக்தி மிகுந்தது. அதே நேரம் 80 சதவீதம் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியது என்று தெரியவந்துள்ளது. சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பில் இருந்தே இதன் மூலப்பொருட்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  [ The Content in the above Article is collected from News Articles] 

Comments

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்