சூரிய மண்டல விந்தைகள்!!! - (அறிமுகம்)
சூரிய மண்டல விந்தைகள் (அறிமுகம்)
நிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கைகளில் உள்ள அலைபேசியில் தொடுதிரையில் இந்த கட்டுரையை வாசிப்பவர்கள், சற்று உங்கள் தலைகளை தூக்கி மேலே பாருங்கள் உங்களுக்கு மேல் என்ன தெரிகிறது???
பெரும்பாலும் உங்களுக்கு தெரிவது ஒரு வீட்டின் மேற்கூரையாக இருக்கலாம் இல்லையெனில் அதனை கடந்து எங்கும் பரந்து விரிந்த வானம் ஆக இருக்கலாம். அந்த வானமானது பகலில் வெண் மேகங்கள் சூழ்ந்த சூரியன் பிரகாசிக்கும் நீல நிறப் போர்வையால் இந்தப் பூமியை போர்த்தியது போல இருக்கும்.
அதே வானமானது இரவு நேரத்தில் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு எங்கும் விண்மீன்கள் அழகிய நிலவு மேலும் அதனுடன் எண்ணற்ற ஆச்சர்யங்களும் விசித்திரங்களும் சூழ்ந்த எல்லைகளற்ற பரந்து விரிந்த காட்சியாக நம் கண்களுக்கு தெரியும்.
எல்லைகளற்ற இந்த பிரபஞ்சமானது தன்னுள் பல அதிசயங்களையும் எண்ணற்ற மர்மங்களையும் கொண்டுள்ளது எண்ணில் அடங்கா விண்மீன் திரள்களைக் கொண்ட இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள விண்மீன் திரள்களின் கூட்டத்தில் ஒரு விண்மீன் திரளான பால்வெளி அண்டத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன்களின் ஒரு விண்மீனான சூரியனை சுற்றி வரும் ஒன்பது கிரகங்களில் ஒன்றான பூமியில் நாம் இருக்கிறோம்.
இந்த பிரபஞ்சமானது "The Big Bang" எனும் பெரு வெடிப்புக் கொள்கையின் படி உருவானது என அனைத்தும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட உரைக்கின்றனர்.
அதன்படி இதற்கு முன்பு இந்த பிரபஞ்சத்தில் இருந்த ஏதோ ஒன்று முற்றிலுமாக வெடித்து சிதறிய போது அதிலிருந்து சிதறிய துகள்கள் கிரகங்களாகவும் நட்சத்திரங்களாகவும் விண்கற்களாகவும் காலப்போக்கில் மாறின. அவ்வாறு உருவானதுதான் இந்த பூமியும்.
ஒன்றின் முடிவில் தான் மற்றொன்றின் தொடக்கம் இருக்கும் என்பது போல ஒரு பெரிய முடிவில் இருந்து நாம் இன்று வாழும் இந்த பிரபஞ்சமானது தோன்றியுள்ளது. இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துகள் தான். இருப்பினும் நாம் தொழில்நுட்பத்தாலும் அறிவியலாலும் இந்த பூமியில் வாழும் மற்ற உயிரினங்களை விட மேம்பட்டு இருக்கின்றோம். இருப்பினும் நாம் அறியாத பல அதிசயங்கள் இந்த பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இருப்பினும் நாம் வாழும் இந்த பூமி இருக்கின்ற சூரிய மண்டலத்தைப் பற்றி நாம் ஓரளவு பல மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம். அவ்வாறு நாம் அறிந்து கொண்ட பல தகவல்களைப் பற்றியும் இந்த சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களின் ஆச்சரியமூட்டும் தகவல்களைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளப் போகிறோம் இந்த கட்டுரையின் மூலம்....!!!.
அடுத்தடுத்து பல பகுதிகளாக வரப்போகும் இந்த கட்டுரையில் இருந்து இந்த சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் புதன் முதல் புளுட்டோ வரை ஆராயப்போகிறோம் ஒவ்வொரு கிரகமும் தன்னுள் பல விந்தைகளைக் கொண்டுள்ளது அதை இந்த கட்டுரையின் மூலம் வாசகர்களிடத்தில் நான் கட்டவிழ்கிறேன்!!!
இந்த கட்டுரைக்கு தேவையான மூல தகவல்கள் ஏன்.ராமதுரை அவர்கள் எழுதிய "சூரிய மண்டல விந்தைகள்" என்னும் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது
காத்திருங்கள் இந்த சூரிய மண்டலத்தின் முதல் கிரகமான புதனைப் பற்றி தான் நாம் முதலில் ஆராய விருக்கிறோம்!!!


Comments
Post a Comment