சூப்பர் கிளஸ்டர் - சூப்பர் நோவா - டாரன்டுலா நெபுலா
சூப்பர் கிளஸ்டர் (SuperCluster)
சிறிய கோள்கள் அல்லது நட்சத்திரங்கள் ஒரு குழுவாக இணைந்து காணப்படும் அமைப்பு 'கிளஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் திரட்சி அல்லது திரள் என்பதாகும். இதுபோல் ஒன்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரக் குழுக்கள் இணைந்த அமைப்பு 'சூப்பர் கிளஸ்டர்' (விண்மீன் பெருந்திரள் அல்லது நட்சத்திரக் கூட்டமைப்பு) என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நட்சத்திர கூட்டமைப்பு என்பது விண்வெளியில் பல கோடி ஒளி ஆண்டுகள் தூரம் பரவி இருக்கும். நாம் வசிக்கும் பூமி இருப்பது கூட ஒரு நட்சத்திரக் கூட்டமைப்பில் தான், இந்த நட்சத்திரக்கூட்டமைப்புக்கு 'லானியாகியா சூப்பர் கிளஸ்டர்' என்பது பெயராகும். இது 520 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம் பரவி இருக்கிறது.
சூப்பர்நோவா (Supernova)
ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு கோளில் ஏற்படும் பெருவெடிப்பு 'சூப்பர் நோவா' என்று
அழைக்கப்படுகிறது. ஒரு கோள் அல்லது ஒரு
நட்சத்திரத்தில் உள்ள எரிபொருள் முழுவதுமாக தீர்ந்து போகும் போது அதில் ஏற்படும் ஈர்ப்பு விசை மாற்றம் காரணமாக பெருவெடிப்பு ஏற்படுகிறது. அப்போது அந்த கோள் அல்லது நட்சத்திரம் பெரிய சத்தத்துடன், மிகப்பெரிய அளவில் ஒளியை வெளிப்படுத்தி வெடித்துச்சிதறும். இந்த பெருவெடிப்பின் போது வெளிப்படும் ஒளி மற்றும் கதிரியக்கம் சூரியன் தன் வாழ்நாளில் வெளிப்படுத்தும் ஆற்றலை விட அதிகமாக இருக்கும். அப்போது ஏற்படும் அதிர்வுகள் ஒரு வினாடிக்கு சுமார் 30 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் விண்வெளியில் பயணம் செய்து அதிர்வுகளை ஏற்படுத்தும். நமது பூமி இருக்கும் பால்வெளி வீதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பெருவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
டாரன்டுலாநெபுலா (Tarantula Nebula)
நாம் வசிக்கும் பூமி இருக்கும் பால்வெளி வீதியில், சூரிய மண்டலத்திற்கு அப்பால்
மேகக்கூட்டம் போன்ற அமைப்பில் நட்சத்திரக் கூட்டங்கள் உள்ள, இவை 'நெபுலா' என்று அழைக்கப்படுகின்றன. இந்த நெபுலாக்களில்
ஒன்று தான் டாரன்டுலா நெபுலா, இது பால்வெளி வீதியில் உள்ள லார்ஜ் மெக்கல்லானிக் கிளவுட் எனப்படும் நட்சத்திர மேகக்கூட்டத்தில் அமைந்துள்ளது. பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் டாரன்டுலா நெபுலா உள்ளது. இதை '30 டூராடுஸ்' என்றும் அழைப்பார்கள், டாரன்டுலா நெபுலா அதிக ஒளியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. நட்சத்திரங்கள் கூட்டமைப்பு உருவாக இந்த டாரன்டுலா நெபுலா முக்கிய பங்கு வகிக்கிறது.
[ The Content in the above Article is collected from News Articles]
Comments
Post a Comment