கனாக் கண்டேன் 4
கனாக் கண்டேன் 4
கவிஞன் வடித்த காரிகையின் இடை என மெலிந்த வெண்ணிலா வில்லென வளைந்த வானத்தின் முனையில் மறைந்தும் மறையாமலும் தன் காதலனை கடைக்கண் கொண்டு பார்க்கும் காதலி போல் மதுரம் அருந்தி அதரம் சிவந்த நிறத்தில் தன் செவ்வொளியை வீசிக்கொண்டு எழும் சூரியனைப் பார்த்து மையல் கொண்டிருந்தது.
அவ்வழகான அதிகாலை வேளையில் இரவு உறக்கத்தை தொலைத்துவிட்டு கண்விழித்து கனாக்கள் கண்ட ராகுல் தன் பல வருட கனவு தன் கண் எதிரில் உயிர்த்தெழுந்த சிற்பம் போல் அவள் வரப்போவதை எண்ணி அத்தருணத்திற்காக தன்னை என்றென்றும் இல்லாத அளவிற்கு சிறப்பாக தயார் படுத்திக்கொண்டான்.
ஒரு ஆண் தன்னை இவ்வளவு தாயார் படுத்திக்கொண்டான் என்றால்!!! பெண்ணைப் பற்றி கேட்கவா வேண்டும்???😊😄😆
இருளை திரட்டி கோர்த்து வைத்தது போன்ற கருங்கூந்தலை அள்ளி கட்டுப்படாத கரும் அருவி வண்ணமயிலின் தோகையானது போல தன் பட்டுக் கரங்களின் பிஞ்சு விரல்களால் தன் கூந்தலை கோதி விட்டாள். தன்னிடம் இருப்பவை அனைத்தும் சிறப்பானவை என அறிந்தும் அவற்றுள் எது சிறந்தது என சிந்தித்து சிந்தித்து குழம்பி போனால் உடையை தேர்ந்தெடுக்க!!! கண் கொண்டு பார்த்தவரின் கண்ணாடி மனதை கல் கொண்டு வீசி காயப்படுத்துவதைப் போன்ற பேரழகி அவள். வைரத்திற்கு தங்கமுலாம் பூசியது போல மின்னும் அவள் மேனியை மேலும் அலங்கரிக்க மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்றில் கோர்த்து வைத்த ஒற்றைக் கல்லால் ஆன கொடுத்து வைத்த சிகப்பு இதயம். என அவளைக் காணும் போது என் இதயமும் அக்கல்லாக இருக்க ஏங்கும் அவளிடத்தில்!!!💕💕💗
பல வருட காத்திருப்பு நிறைவடையப்போகும் அத்தருணத்திற்காக சில மணிநேரம் காத்திருப்பதில் ஒன்றும் தவறில்லை என எண்ணி ராகுல் பேருந்து நிறுத்தத்திற்கு வருகிறான். ஆண்களுக்கு காதலின் சுகம் காத்திருப்பதில் கிடைக்கும் என உணர்ந்தவன் ராகுல். அதேபோல் பெண்களுக்கு காதலின் இன்பம் காத்திருக்க வைப்பதில் கிடைக்கும் என தெரியாதா அவளுக்கு ஆதலால் அவளும் தாமதித்தால் காதலுக்காக!!!💕💕💘
தொலைவில் உள்ள மரங்கள் கடந்து செல்லும் வாகனங்கள் காலை வேளை குயில் பாட்டு தொட்டுச் செல்லும் தென்றல் தொடாமல் சொக்க வைக்கும் பாட்டுச் சத்தம் சற்றே தள்ளி நிற்கும் பள்ளிக் குழந்தைகள் என அவனைச் சுற்றி அனைத்தும் அவளாக தெரிந்தது ராகுலுக்கு!!!😍😍😍
காதல் தரும் மயக்கம் முதலில் ஆட்டிப்படைப்பது கண்களைத்தானோ என்னவோ??? 💕👀💕
ஆனால் அக்காதல் தரும் மயக்கம் இறுதியில் கரைந்து உறைந்து கலப்பது உயிரில் தான். அவ்வுயிர் உட்புகுந்து ஓடும் இருதயமும் அவ்வுயிர் தேங்கி நிற்கும் மூளையும் ஸ்தம்பித்து சிறைப்பட்டு விடுகின்றன அக்காதலிடத்தில்!!!.🔒💘🔒
அவ்வாறு காதலிடத்தில் சிறைபட்ட ராகுல் அவளின் விழிகளிடத்தில் சிறைப்படுவதற்காக காத்திருக்கிறான்!!!🔒👀🔒
அவனது காத்திருப்பு முடிவடைகிறது!!!
மஞ்சள் வானில் மறைந்தும் மறையாமலும் தெரியும் பால் நிலா அவளைக் கண்டவுடன் வெட்கத்தில் மறைந்து கொள்கிறது. நிலவைப் பதித்து வைத்த கருமுகில் போல் கார்குழலுக்கு நடுவில் நிலவென அவள் முகம். வைரத்திருமேனி தரித்த அவளுக்கு அழகு சேர்க்க தங்கநிற ஆடை. சலவை செய்த வெண்முகில் போல் அவள் ஆடையில் வெண்ணிற மேலாடை. முகம் மறைக்கும் ஒற்றைக் கூந்தலை கோதி சரி செய்யும் அவ்விரு விரல்கள் கூந்தலோடு சேர்த்து ராகுல் மனதையும் கோதுகின்றன சரி செய்ய அல்ல அதனை மீண்டும் கலைக்க!!!
தான் கண் கொண்டு பார்த்தவள் அவள் தானா இல்லை அத்தேவலோக பெண்ணா!!! என கண்டறிய இயலா அவன் மனதில் சூறைக்காற்று வீசுவது போல் அக்காரிகை அவனை நோக்கி கையசைத்தாள்.
எட்டு வருடங்களுக்கு முன் அவன் கண்ட முகம் இப்போது கனிந்த அதரங்கள் கொண்டு அழகிய பதுமை என அவள் உள்ள திகைப்பையே அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. அதற்குள் அவள் அவனை நோக்கி கையசைப்பதை அவன் ஸ்தம்பித்த மூளை உணர வெகு நேரம் ஆகிறது. இவன் மகரந்த்ததை தேடி திரியும் வண்டு வண்ண மலர்களின் தோட்டத்தை கண்டு மயங்கிக் கிடப்பதைப் போல அவளைக் கண்டு திகைத்து நிற்க்கிறான்!!!😮💘😮
அவளும் தன் காதலை கண் கொண்டு கண்டவளாய் காத்திருக்கும் அவனிடத்தில் பேச எண்ணி அவனை நோக்கி வருகிறாள். அப்போது மற்றொரு அழகிய பெண் முகில் ராகுலை பின்னிருந்து கட்டி அணைக்கிறாள் அதிர்ந்த ராகுல் திரும்பிய போது அவன் முன் நின்றது ஸ்ரீ!!!. " என்னடா அப்பிடி பாக்கற நான் இப்போ உன் college தான் இனிமே நான் உன் கூடத்தான் படிக்க போற,
i am really very happy to being with you!!! என்றால்.
பேச வந்த தீபிகா அதிர்ந்து நிற்கிறாள்.
இப்போது ராகுல் காண்பது கனவு அல்ல உண்மை!!!
ஒரு புறம் ராகுல் காதலிக்கும் தீபிகா
மறுபுறம் ராகுலைக் காதலிக்கும் ஸ்ரீ என மூவரும் நிற்கும் போது கல்லுரிப் பேருந்து வருகிறது. இனி இம்மூவருடன் சேர்ந்து இக்கதையும் கல்லூரியை நோக்கி பயணப்பட உள்ளது!!!.✍✍✍

nice story and superb words!!!
ReplyDelete