கனாக் கண்டேன் 2

                           கனாக் கண்டேன் 2


"கனவு கண்டது போதும் போய் குளி" என்ற அம்மாவின் செல்ல அதட்டலுக்கு அஞ்சி ராகுல் படுக்கையில் இருந்து எழுகிறான். இருப்பினும் நடந்தவை கனவுதான் என இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. அவன் மீண்டும் அவனுடைய மொபைலை எடுத்து அதைப் பார்க்கிறான். அந்த Unknown number இல் இருந்து,
                       
                                My name is deepika

என்று message வந்திருந்தது. அவன் அதைக் கண்டபடியே மொபைலை Charge இல் இணைக்கிறான். வழக்கத்தை விட பல முறை கண்ணாடியை பார்த்து வெளியில் செல்ல தயாராகிறான். ஆமாம் அவன் செல்வது அவனுடைய தோழி அனு வீட்டிற்குத்தான். ராகுல் தன்னுடைய Royal Enfield Himalayan யை
வீட்டிற்க்குள் இருந்து வெளியில் எடுத்தான். அந்த வெண்மை நிற இரும்புக் குதிரையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். மாதம் ஒருமுறை ஏதாவது ஒரு மலைப்பகுதிக்கு அவன் தனியாக சென்று வருவான். அது அவனுடைய மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.


                ராகுல் ஐந்தே நிமிடத்தில் அனுவின் வீட்டுக்கு வந்துவிட்டான்.  அவனை அனு " டேய் உள்ள வந்து wait பண்ணு ஒரு 5 minutes!!! " என்று கூறி உள்ளே அழைத்தால். அனுவின் அம்மா அவனை  " வா ராகுல் சாப்பிடலாம்!!! " என்றார்கள். " இல்ல auntie நான் சாப்டுட்டு தான் வந்தேன்" என்று கூறினான். சற்று  நேரத்தில் அனு வந்தாள். இருவரும் ஓவியம் கற்றுக் கொள்ள ஒவிய வகுப்பிற்கு செல்கிறார்கள்.

                  வழியில் ராகுல் அவனுக்கு வந்த கனவைப் பற்றி அனுவிடம் கூறுகிறான். அவளோ, "ஓ நீ இவ்வளவு advanceஆ போய்ட்டியா??? " என்று கிண்டலடித்தால். " ஏய் அனு என் feelingsஅ புரிஞ்சிக்கோ!!!  கிண்டல் பண்ணாத??? " என்று கூறினான். அவளும் பதிலுக்கு  " சரி சரி சீக்கிரம் போ " என்றால்.
சற்று நேரத்தில் அந்த ஓவியப் பள்ளி வந்தது.

                 "Art is part of soul" என்று எழுதப்பட்ட வளைவின் வழியாக இருவரும் உள்ளே செல்கின்றனர். ராகுல் பைக்கை மர நிழலில் நிறுத்தி விட்டு மெதுவாக உள்ளே செல்கிறான். அப்போது இன்னொரு Unknown number இல் இருந்து,
                                         Hi.....
                                         I am sri என்று
message வருகிறது. அதைக் கண்டவுடன் ராகுலுக்கு இதழ் ஓரம் புன்னகை பூத்தது. இவனும் பதிலுக்கு,
                         
                                     Hello
                                     I can't believe it's really you???
என்று ஆச்சர்யத்துடன் பதில் அனுப்பினான். ஏனெனில் ஸ்ரீ அவனுடன் +1,+2 படித்தவள். ஆனால் இப்போது வேறு ஒரு கல்லூரியில் படிக்கிறாள். இருவரும் பள்ளியில் மிக நெருங்கிய நண்பர்கள். அனுவிற்கு அடுத்து ராகுல் இவளுடன் தான் அதிகமாக பேசுவான்.
 
                    ராகுல் என்று அழைக்கும் சத்தம் கேட்டு அவன் திரும்பினான். அனு அவனை வகுப்பினுள் செல்ல அழைத்தால். இருவரும் உள்ளே சென்று அவர்களின் வழக்கமான மேசையில் உட்கார்கின்றனர். இன்னும் வகுப்பு துவங்குவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது.
ராகுல் நேரம் கடத்தாமல் அந்த முதல் Unknown number க்கு
                                        Hi.... என்று
Message அனுப்புகிறான். பதிலுக்கு மறுமுனையில் இருந்தும்
                       
                                        Hey
                                        hi.... என்று
Message வருகிறது. ராகுல்,
 
                                        May i store your number???
என வினா எழுப்புகிறான்.அவளோ,

                                        Yes, of course
என பதில் அனுப்புகிறாள். ராகுல் அந்த number யை deepika/ml என சேமிக்கிறான்.அடுத்து,
   
                                        Your dp is so lovely
என வர்ணிப்பைத் துவங்குகிறான்.அதன் பிறகு என்ன??? இந்தப் பக்கம் இருந்து கவிதைகளும் அதற்கு அந்தப் பக்கம் இருந்து வெட்க மழையும் மாறி மாறி பொழிகிறது.

                      அந்த மழைக்கு நடுவில் ஆசிரியர் வகுப்பினுள் வருகிறார். ராகுல் மொபைலை off செய்து உள்ளே வைக்கிறான். அந்த ஆசிரியருடன் ஒரு அழகிய பதுமையும் உள்ளே வருகிறது.

                  வெண் முகில் போன்ற மென்மையான பாதத்தால் அவள் அழகிய ஓவியம் போல நடந்து வந்தாள். அந்தப் பதுமையைக் கண்டவுடன் ராகுல் உள்ளத்தில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. அவள் ராகுலின் பள்ளித் தோழி ஸ்ரீ தான். அவள் அந்த ஓவியப் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளால்.

                    அவள் இந்த பள்ளியில் சேர்ந்தது ராகுல் அனு இருவருக்கும் மகிழ்ச்சியைத் தான் தந்தது. நீண்ட நேர வகுப்பிற்கு பிறகு அவர்கள் மூவரும் வெளியில் வந்தனர். அதன் பிறகு என்ன??? நண்பர்களின் அரட்டை நீண்ட நேரம் சென்றது. இறுதியில் ஸ்ரீ ராகுலிடம்,  "ராகுல் நான் scooty எடுத்துட்டு வரல என்ன கொஞ்சம் வீட்டுல  விட்டுடிறியா??" எனக் கேட்டாள் ராகுலும் அனுவை காத்திருக்க சொல்லிவிட்டு ஸ்ரீ யை வண்டியில் ஏறச் சொன்னான்.

                வழியில் ஸ்ரீ ராகுலிடம், "ராகுல் ஒரு வருசத்துல நீ இப்படி மாறிட்ட !!! இப்போ செம handsomeஅ இருக்க!!!  School லயே நீ தான் என்னோட Best company ஆனா college ல நான் உன்ன ரொம்ப miss பண்ண டா!!! மறுபடியும் உன்ன எப்போ பாப்பனு இருந்த அதான் ரொம்ப கஷ்டப்பட்டு உன் numberஅ school ல இருந்து வாங்குன. இந்த drawing school ல சேந்த எல்லாம் உனக்காத்தான் ராகுல் நாம இப்போ இருக்கர மாதிரி life fullஆ happyஅ இருக்கனும்.

                               That's why I really Love you!!!
                                    I Love you so much!!!

அப்போது அனு ஸ்ரீ யின் தோளைத் தட்டி அசைத்தாள்.  " ஏய் என்ன ஆச்சி அப்படியே statue மாதிரி நின்னுட்ட??? " என கேட்டாள் அதற்கு ஸ்ரீ கூறிய பதில்,

                                    " கனாக் கண்டேன்!!!"
 
                                 
                   
               

                         

            

Comments

Post a Comment

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்