விழிகள் சந்தித்தன

விழிகள் சந்தித்தன


ஈரமான இதவெயில் தென்றல் காற்று
கார்குழலில் மோத

இனியவை சொல்லி பறக்கும் பச்சிளம்
பச்சிகளும் கூட பாடல் சொல்ல

கடந்து செல்லும் வாகனங்களின் சத்தம்
கூட கவிதையாய் கேட்க

சின்ன சின்ன செல்லக் குழந்தைகளின் சுட்டு
விரல் ஸ்பரிசம் சுகமளிக்க

இதயம் உயிரைக் காணும் கணங்கள் இது
என கண்களுக்கு கடிதம் எழுத

உடலில் ஒடும் ஒவ்வொரு துளி
ரத்தத்தையும் இதயம் உணர

சந்தனமும் பன்னிரும் மயிலிரகால் தெளித்தாற்போல் அங்கமெங்கும் சிலிர்க்க

அணுவணுவாய் அடுக்கி ஆக்கப்பட்ட அங்கம்
தங்கமென கொண்ட

தேவலோக அரம்பையருள் தேடினாலும்
கிட்டாத தேவதை

உடலை விடுத்து உயிரைக் கொன்றாற்போல்
நெஞ்சத்தை  ஆட்கொள்ள

காதல் என்னும் கண்ணாடி  கூண்டுக்குள்
சிக்கிக் கொள்ள இருவர்
"விழிகளும் சந்தித்தன". 
                                               

Comments

Post a Comment

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்