கனாக் கண்டேன் 4
கனாக் கண்டேன் 4 கவிஞன் வடித்த காரிகையின் இடை என மெலிந்த வெண்ணிலா வில்லென வளைந்த வானத்தின் முனையில் மறைந்தும் மறையாமலும் தன் காதலனை கடைக்கண் கொண்டு பார்க்கும் காதலி போல் மதுரம் அருந்தி அதரம் சிவந்த நிறத்தில் தன் செவ்வொளியை வீசிக்கொண்டு எழும் சூரியனைப் பார்த்து மையல் கொண்டிருந்தது. அவ்வழகான அதிகாலை வேளையில் இரவு உறக்கத்தை தொலைத்துவிட்டு கண்விழித்து கனாக்கள் கண்ட ராகுல் தன் பல வருட கனவு தன் கண் எதிரில் உயிர்த்தெழுந்த சிற்பம் போல் அவள் வரப்போவதை எண்ணி அத்தருணத்திற்காக தன்னை என்றென்றும் இல்லாத அளவிற்கு சிறப்பாக தயார் படுத்திக்கொண்டான். ஒரு ஆண் தன்னை இவ்வளவு தாயார் படுத்திக்கொண்டான் என்றால்!!! பெண்ணைப் பற்றி கேட்கவா வேண்டும்???😊😄😆 இருளை திரட்டி கோர்த்து வைத்தது போன்ற கருங்கூந்தலை ...
Comments
Post a Comment